மைத்திரி தரப்புக்கு இடையூறு செய்ய வேண்டாம்! நீதிமன்றம் உத்தரவு
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்(Sri Lanka Freedom Party) மைத்திரி தரப்பின் செயற்பாடுகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று கடுவலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியின் தலைவராக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், செயலாளராக கீர்த்தி உடவத்தவும் நேற்று(12) தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
சம்பூர் பகுதியில் கைதான முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய நால்வருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
செயற்குழு உறுப்பினர்கள்
இந்நிலையில் தங்கள் தரப்பு சுதந்திரமாக செயற்படுவதை உறுதிப்படுத்துமாறும், தங்கள் அணிக்கு எதிரான செயற்பாடுகளுக்கு தடைவிதிக்குமாறும் கோரி, சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் இருவர் இன்று(13.05.2024) கடுவலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட 20 பேர் இதன் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்ததோடு வழக்கை விசாரித்த கடுவலை மாவட்ட நீதிமன்ற நீதவான், விஜேதாச ராஜபக்ச தரப்பின் செயற்பாடுகளுக்கு இடையூறு செய்வதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு சகல தரப்பினருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |