இனியும் குரங்குகள் மீது பழி போடாதீர்: அரசாங்கத்திடம் சஜித் வலியுறுத்து
மின் துண்டிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (14) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "இந்த மின் துண்டிப்பு குறித்து இந்தச் சபையில் அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
மின் தடை
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த ஞாயிற்றுக்கிழமையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சூரிய சக்தி உற்பத்திக்கு ஏற்ப விநியோகம் இடம்பெறாவிட்டால் மின் தடை ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
இது தொடர்பில் அரசாங்கத் தரப்பில் பதில் வழங்க வேண்டும். புதிய உற்பத்தி ஆலைகளைத் திறந்து சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் குரங்குகள் மீது பழி போட வேண்டாம் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
