பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை! புதிய அமைச்சரவை விபரம் வெளியானது
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே அதிரடி நடவடிக்கைகள் எடுக்க தொடங்கியுள்ளார்.
இதற்கமைய, முதற்கட்டமாக பிரித்தானியாவின் துணைப்பிரதமர் மற்றும் நீதித்துறை செயலாளராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார்.
டொமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மந்திரி சபையில் துணைப் பிரதமர் பதவியில் இருந்தவர் என்பதுடன், முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்ஸின் மந்திரி சபையில் பதவியிலிருந்த பலரை பதவி விலகுமாறு புதிய பிரதமர் ரிஷி சுனக் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதிரடி நடவடிக்கை
புதிய பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே இந்த அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார்.
அதன்படி, வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக், நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ், வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் க்ளோ ஸ்மித் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் விக்கி போர்ட் ஆகியோர் பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அலோக் சர்மா மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், நிதியமைச்சராக ஜெர்மி ஹன்ட் தொடர்ந்தும் நீடிக்கின்றார்.
நாதிம் ஜஹாவிக்கு புதிதாக மந்திரி சபையில் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவருக்கான துறை ஒதுக்கப்படவில்லை. பென் வாலஸ் மீண்டும் வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜேம்ஸ் கிலெவர் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதுடன்,நாடாளுமன்ற கருவூலத்தின் செயலாளராக சைமன் ஹார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாதிம் ஜஹாவி

வெளியுறவுத்துறை செயலாளர் பென் வாலஸ்

நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட்

வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிலெவர்

நாடாளுமன்ற கருவூலத்தின் செயலாளர் சைமன் ஹார்ட்
உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன்

சுகாதார செயலாளர் ஸ் டீவ் பார்க்லே

வீட்டுவசதி மற்றும் சமூகங்கள் செயலாளராக மைக்கல் கோவ்

போக்குவரத்து செயலாளர் மார்க் ஹார்பர்

கலாச்சார செயலாளர் மிச்செல் டோனலன்

வேலை மற்றும் ஓய்வூதியச் செயலாளர் மெல் ஸ்ட்ரைட்

கல்வி செயலாளர் கில்லியன் கீகன்

19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri