2028ஆம் ஆண்டில் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி - பேராசிரியர் எச்சரிக்கை
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பில் நாடுகளுக்கு ஏற்ப தனித்தனியான முடிவுகளை எடுக்க முடியாது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தேசாவிடம் தெரிவித்தார்.
அனைத்து நாடுகளையும் சமமாக நடத்தும் கொள்கையின்படி அந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை செலுத்த வேண்டிய கடனை குறைக்க எந்த நாடும் ஒப்புக்கொள்ளவில்லை. செலுத்த வேண்டிய கடனை 2028 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு உற்பத்தி
நாட்டின் கடன் குறித்த தற்போதைய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இருப்பதாகவும், அந்தத் தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120 சதவீதத்தை மீறுவதாகவும் அவர் கூறினார்.

அதன்பிறகு வாங்கிய, வாங்கும் கடன்களும் இதனுடன் சேர்த்து, இதன்படி நாம் கட்ட முடியாத கடன் தொகையும் எதிர்காலத்தில் சேரும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
2028 ஆம் ஆண்டளவில், கடன்களின் உண்மையான மதிப்பு குறையக்கூடும், ஆனால் கடன்களின் இருப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையைப் போக்க, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, நாடு பணம் பெறும் வழிகளையும் உருவாக்கி, பொருளாதாரத்தை அரசாங்கம் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri