நெருக்கடிக்குள்ளாகும் ஏழ்மை நாடுகள் : ஐ. நா சபை சுட்டிக்காட்டு
அரசியல் சீர்குலைவு மற்றும் அமைதியின்மையால் உலகின் ஏழ்மையான நாடுகள் கடன் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத் தலைவர் அச்சிம் ஸ்டெய்னர் ( Achim Steiner) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"20 முக்கியப் பொருளாதார நிலையை கொண்ட நாடுகள் ஒரு மென்மையான பாதையில் வளர்ச்சியை நோக்கிச் செல்கின்றன.
ஆனால் 3.3 பில்லியன் மக்களைக் கொண்ட 50 குறைந்த வருமானம் கொண்ட நாடுகளால் தங்கள் கடனைச் செலுத்த முடியவில்லை அல்லது அந்த நிலைக்குச் செல்லும் அபாயத்தில் உள்ளன.
பொருளாதார நெருக்கடிகள்
அந்த நாடுகளில், கடன் சேவை கொடுப்பனவுகள் வெளிநாட்டு முதலீடுகளை விட அதிகமாக உள்ளதுடன் மூலதனச் சந்தைகளில் கடன் வாங்கும் திறன் அவற்றிடம் இல்லை.
இந்த வாரம் உலக வங்கி அபிவிருத்தியின் வரலாற்று தலைகீழ் மாற்றத்தை எச்சரித்தது.
உலகின் 75 ஏழ்மையான நாடுகளில் பாதியளவானவை இந்த நூற்றாண்டில் முதல் முறையாக பணக்கார பொருளாதாரங்களுடன் வருமான இடைவெளியை விரிவுபடுத்தியுள்ளன.
அடிப்படையில் நாம் அரசியல் ஸ்திரமின்மையின் காலத்திற்குள் நுழைகிறோம். இதன் காரணமாக நாடுகள், உணவு அல்லது எரிபொருளை இறக்குமதி செய்வதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.
பொதுமக்களின் நிலை
மேலும், வங்கித் துறைகள் சிரமப்படலாம். மற்றும் குடிமக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்கலாம்.
உதாரணமாக, இலங்கையில் சில பத்திரக் கூப்பன் கொடுப்பனவுகளை நாடு செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து பொதுமக்களின் கோபம் கொதித்தது.
இதன்போது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) நாட்டை விட்டு வெளியேற கூறி மக்களால் கட்டாயபடுத்தப்பட்டார்.
பொதுவாக உலகப் பொருளாதார அமைப்பில் மக்கள் நம்பிக்கையை இழந்து வருவதுடன் இது ஏழ்மையான நாடுகளில் உள்ள ஆழமான பிரச்சினைகள், போர்கள் மற்றும் பிற பெரிய அபாயங்களை ஊக்குவிக்கும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |