எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் (DDR) தொடர்பில் தனது தீர்ப்பை திரும்ப பெறுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (11.08.2023) நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக எந்த வகையிலும் உத்தரவு பிறப்பிக்க நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை என்று ஆகஸ்ட் 9 ஆம் திகதி, சபாநாயகர் அளித்த தீர்ப்பு தவறான முன்னுதாரணமாக அமையும்.
அத்துடன் அது நாடாளுமன்றத்துக்கும் நீதிமன்றுக்கும் இடையே மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.
தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணம்
எனினும் “நான் சட்ட ஆலோசனையை பெற்றுள்ளேன். மற்றும் தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் பார்த்தேன். மேலும், எனது தீர்ப்பில் எந்த நீதிமன்ற வழக்கையும் நான் குறிப்பிடவில்லை. எனவே நான் அதை திரும்பப் பெறமாட்டேன்” என்று சபாநாயகர் இதன் போது பதிலளித்தார்.
சபாநாயகரிடம் ஆரம்பக் கோரிக்கையை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, இந்த தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்று கூறினார்.
அத்துடன் நீங்கள் எப்பொழுதும் நிர்வாகியை மகிழ்விக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. எனினும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.
எனவே உங்கள் தீர்ப்பை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைச் செய்தால் உங்களாலும் உங்கள் கௌரவத்தைப் பாதுகாக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பு நெருக்கடி
இந்த நிலையில் சபாநாயகர் வழங்கிய தீர்ப்பு அரசியலமைப்பு நெருக்கடிக்கு வழிவகுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். “உங்கள் தீர்ப்பின் விளைவாக எதிர்காலத்தில் சட்டத்தின் ஆட்சி உடைந்துவிடும். இது அரசியலமைப்பு நெருக்கடிக்கும் வழிவகுக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் சபாநாயகர் தீர்ப்பை வழங்கியதன் மூலம் நீதித்துறையில் செல்வாக்கு செலுத்தியதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதில் அளித்த சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த, ஒரு குறிப்பிட்ட சட்டம் அரசியலமைப்புக்கு இசைவானதா என்பதை மட்டுமே நீதித்துறை ஆராய முடியும் என்று தெரிவித்தார்.
தற்போதைய சபாநாயகர் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மட்டுமே குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தினார். அவர் எந்த நிலையிலும் நீதித்துறைக்கு சவால் விடவில்லை என்று சுசில் பிரேமஜயந்த கூறினார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சபாநாயகர் வழங்கிய தீர்ப்புகளை எவராலும் சவால் செய்ய முடியாது என்று இதன் போது தெரிவித்தார்.
சபாநாயகர் வழங்கிய தீர்ப்பை அவர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் மட்டுமே குறிப்பிட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
