மட்டக்களப்பில் திடீரென கரையொதுங்கிய டொல்பின் வகை மீன்கள் (Video)
மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடலில் டொல்பின் வகை மீன்கள் சில கரையொதிங்கியுள்ளன.
இந்த வகை மீன்கள் இன்றையதினம் (25.10.2023) ஆழ் கடல் பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி வந்திருந்ததாகவும், அவற்றினை மீண்டும் கடலில் விடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வாகரை பிரதேச செயலாளர் டி.அருணன் தெரிவித்துள்ளார்.
காயப்பட்ட டொல்பின்களுக்கு ஊசி மூலம் மருந்து கொடுக்கப்பட்டு பாதுகாப்பாக சுமார் 1 கிலோ மீற்றருக்கு அப்பால் கடலில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் ஏற்பட்ட விபத்து
கடலில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவை காயமடைந்த நிலையில் கரையொதிங்கியிருக்கலாம் என அங்கு வருகை தந்திருந்த சில அதிகாரிகளினால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடற்றொழில் திணைக்களம், கஜீவத்தை கடற்படையினர்,நாரா,கிரான், அம்பாறை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச மீனவ சங்கங்கள் இணைந்து குறித்த மீன்களை பாதுகாப்பாக கடலில் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
