மன்னார் இலுப்பைக்கடவை கடற்கரை பகுதியை நோக்கி படையெடுத்த டொல்பின் கூட்டம்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரை பகுதியை நோக்கி நேற்றையதினம் சனிக்கிழமை (15.11.2025) பிற்பகல் ஒரு தொகை டொல்பின் மீன்கள் கூட்டமாக கடற்கரையை வந்தடைந்துள்ளன.
இந்தநிலையில், இதனை அறிந்த அப்பகுதி கடற்றொழிலாளர்கள், பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் சென்று அவற்றை பார்வையிட்டதோடு, சிறுவர்களுடன் டொல்பின் மீன்கள் விளையாடியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
குறித்த டொல்பின் மீன் இனம் மன்னார் மாவட்டத்தில் கரையோர பகுதிக்கு கூட்டமாக வருகை தந்தமை இதுவே முதல் தடவையாகும்.
அரிய காட்சி
நீண்ட நேரம் இலுப்பை கடவை கடற்கரையோரங்களில் கூட்டமாக சுற்றித் திரிந்த குறித்த டொல்பின் மீன்களை தமது இருப்பிடம் நோக்கி செல்ல சில கடற்றொழிலாளர்கள் உதவி செய்தனர்.
இந்தநிலையில், குறித்த டொல்பின் மீன்கள் மீண்டும் கூட்டமாக தமது இருப்பிடத்தை நோக்கி சென்றது. குறித்த அரிய காட்சியை கடற்றொழிலாளர்கள் தமது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam