இன்று இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!
இன்றைய நாளுக்கான (28.01.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
டொலர் மற்றும் யூரோவின் பெறுமதி
இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.89 ஆகவும், விற்பனை பெறுமதி 313.43 ஆகவும் பதிவாகியிருந்த வேளையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.98ஆகவும், விற்பனை பெறுமதி 313.51ஆகவும் பதிவாகியுள்ளது.
அதே போன்று, இன்றைய தினம் கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223.57ஆகவும் விற்பனைப் பெறுமதி 231.64 ஆகவும் பதிவாகியுள்ளதுடன், கடந்தவாரம், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219.81ஆகவும் விற்பனைப் பெறுமதி 227.81ஆக இருந்தது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365.79 ஆகவும் விற்பனைப் பெறுமதி 377.50ஆகவும் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
அதே சமயம் கடந்த வாரம், கொள்முதல் பெறுமதி 357.27 ஆகவும், 399.23 விற்பனை பெறுமதியாகவும் பார்க்கப்பட்டது.
அவுஸ்திரேலிய டொலர், ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211.77 ஆகவும் விற்பனைப் பெறுமதி 221.21 ஆகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், கடந்த வாரம், அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203.99 ஆகவும் விற்பனைப் பெறுமதி 213.25 ஆகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.