துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இராணுவ சிப்பாய்: சாவகச்சேரியில் சம்பவம்
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இராணுவப்சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப் படைப்பிரிவு முகாமில் இடம் பெற்றுள்ளது.
விசாரணைகள் ஆரம்பம்
இன்று(28) காலை 6 மணி அளவில் குறித்த இராணுவ சிப்பாய் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய எச்.எம்.டபிள்யூ.பீ. பண்டார என்ற சிப்பாயே இவ்வாறு படுகாயமடைந்தவராவார்.
வயிற்றுப் பகுதியில் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், துப்பாக்கி சூட்டுக்கான காரணம் அறியப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam