டொலரின் பெறுமதி எகிறும் என எச்சரிக்கை
அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வடையும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸாநாயக்க(Chamara Sampath Dassanayaka) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு தற்பொழுது 5.7 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்துள்ள டொலர் கையிருப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் டொலர் கையிருப்பு 300 மில்லியன்களினால் குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 310 ரூபாவாக உயர்வடையும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்தக் காலப் பகுதியில் டொலர் கையிருப்பு மேலும் 200 மில்லியன் டொலர்களினால் குறைவடையும் என சாமர சம்பத் தஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

Neeya Naana: மாமியார் வீட்டில் பிரியாணியில பீஸே வைக்கலை! குமுறிய மருமகன்... கோபிநாத் ரியாக்ஷன் Manithan
