வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(12) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 294.51 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 285.94 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரொன்றின் கொள்முதல் பெறுமதியானது 209.48 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 200.71 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.16 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், ஸ்டெர்லிங் பவுன்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.49 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 363.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri