மீண்டும் உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(14.10.2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.49 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 217.25 ரூபாவாகவும், கொள்வனவு விலை 207.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 326.69 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 313.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 389.97 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 375.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam