டொலரின் பெறுமதியில் தொடர் மாற்றம்
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(08.10. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.03 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 220.17 ரூபாவாகவும், கொள்வனவு விலை 210.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 329.01 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 315.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 391.7 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

விசாரணைக்கு கைக்கோர்த்து வந்த மாதம் ரங்கராஜ்.. பிரசவத்தை நெருங்கும் ஜாய் கிரிசில்டா- நேரில் சந்திப்பு! Manithan

ரிலீஸ் முன்பே பிரதீப் ரங்கநாதன் Dude திரைப்படம் செய்துள்ள கலெக்ஷன்... தயாரிப்பு நிறுவனம் ஹேப்பி Cineulagam
