தொடர்ந்து வீழ்ச்சியடைந்த டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்
கடந்த வெள்ளிக்கிழமைடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(08.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (08.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.89 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.34 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 224.99 ரூபாவாகவும், கொள்வனவு விலை 215.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 331.03 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 317.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 385.50 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 370.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
