24 மணிநேரத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(30.11.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (30.11.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.45 ரூபாவாகவும், கொள்வனவு விலை 323.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 247.13 ரூபாவாகவும், கொள்வனவு விலை 236.02 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 367.62 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 353.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 425.03 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 409.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வவுனியாவில் தாய் - தந்தைக்கு நேர்ந்த கொடூரம்! வீட்டிற்கு வந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |