மீண்டும் இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (30.11.2023) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 672,445.65 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இது சிறு வீழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 673,791 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,770 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 190,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 174,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,790 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,800 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166,400 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri