இரண்டு நாட்களில் கடும் உயர்வை அடைந்த இலங்கை ரூபா! ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(02.08.2023) பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி கடுமையாக உயர்வடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (02.08.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 322.68 ரூபாவாகவும், கொள்வனவு விலை 309.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.90 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 356.19 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 338.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 413.54 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 394.16 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |