வீழ்ச்சியை நோக்கி நகரும் இலங்கை ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கி அறிவிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(08.06.2023) வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த நான்கு வாரங்களாக மீண்டும் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது.
எனினும், நேற்றும் இன்றும் ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (08.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.91 ரூபாவாகவும், கொள்வனவு விலை 285.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 321.63 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 304.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 373.39 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 354.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |