400 ரூபாவிற்கு செல்லும் டொலரின் பெறுமதி! அநுரவுக்கு சென்ற எச்சரிக்கை
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் அதன் பிறகு அமெரிக்க டொலரின் பெறுமதி 400 ரூபாவிற்கு செல்லும் என எம்மை எச்சரித்தார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்த காலப்பகுதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கி அனுமதியை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தோம்.
இதன்போது, வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி மீண்டும் கடுமையாக உயரும் என்றும் 400 ரூபா என்ற மட்டத்தை டொலரின் பெறுமதி தொடும் என்றும் எம்மை எச்சரித்தனர்.
டொலரின் பெறுமதியை வைத்து பல பிரசாரங்களை மேற்கொண்டனர். இன்று என்ன நடந்துள்ளது. வாகன இறக்குமதிக்கு நாங்கள் அனுமதி வழங்கியிருக்கின்றோம்.
அதேபோல டொலரின் பெறுமதியையும் மாற்றமில்லாமல் பேணி வருகின்றோம். நீண்ட காலத்திற்கு 300 ரூபா என்ற மட்டத்தில் நாங்கள் டொலரின் பெறுமதியை நிலை நிறுத்தியிருக்கின்றோம்.
ஒரு காலத்தில், இரவு உறங்கச் செல்லும் போது அமெரிக்க டொலரின் பெறுமதி ஒன்றாகவும், காலை விழித்ததும் டொலரின் பெறுமதி வேறொன்றாகவும் ஸ்திரமற்ற நிலையில் காணப்பட்டது. அப்படிப்பட்ட நிலையை எமது அரசாங்கம் மாற்றியமைத்து டொலரின் பெறுமதியை நிலையாகப் பேணி வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா? News Lankasri

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
