குறைந்த வேகத்தில் மீண்டும் அதிகரித்த அமெரிக்க டொலரின் பெறுமதி
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(11.10.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்றையதினம் அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி ஏற்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (11.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.78 ரூபாவாகவும், கொள்வனவு விலை 318.02 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.55 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 350.84 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 335.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 406.00 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 390.21 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

நல்லது சொல்ல கூட இருங்க.. தவறா சொல்லி ஏத்திவிட வேண்டாம்.. கரூர் துயர சம்பவம் குறித்து இயக்குநர் சேரன் பதிவு Cineulagam
