ரூபாவின் பெறுமதியில் கடும் வீழ்ச்சி! மத்திய வங்கியின் தகவல்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.01 ரூபாவாகவும், கொள்வனவு விலை 318.27 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இந்தநிலையில் நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றுடன் ஒப்பிடும் போது, யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 366.71 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 346.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 416.44 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 393.83 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam
