அழுத்தங்களை முறியடித்து இலக்குகளை அடைய முடியும்! நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி
சரியானதை செய்வது சவால் மிக்கது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotapaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அழுத்தங்களை முறியடித்து இலக்குகளை அடைய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
விவசாய அதிகாரிகளுடன் நிகழ்நிலை தொழில்நுட்பத்தில் இன்று நடாத்திய சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதன் மூலம் சவால்களை முறியடிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பசுமை விவசாயத்தின் மூலம் ஒன்று இரண்டு போகங்களில் மட்டும் நன்மை ஏற்படப்போவதில்லை எனவும், பல தலைமுறைகளுக்கு நன்மை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கு தீர்வு வழங்குவது அதிகாரிகளின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் எந்தவொரு தவறையும் செய்யுமாறு எவரையும் கோரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri