முக்கிய திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ள பசில் தொடர்பான ஆவணங்கள் - வெளிவந்துள்ள புதிய தகவல்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான விசாரணைகளின் வழக்கு ஆவணங்கள், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், சர்வதேச கைது பிடியாணை பெறவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவந்த செய்திகளுக்கு மத்தியிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு
முன்னதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு கோட்டை நீதவான் வசந்த அமரசூரிய உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன், அவருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை பெறுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதவான் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள்