மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு: நாடு திரும்பும் வைத்தியர்கள்
மருத்துவர்களின் பற்றாக்குறையானது, நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள் தற்போது நாடு திரும்புவதால் தீர்வுக்கு வரும் என சுகாதார துறை பிரதி பணிப்பாளர் நாயகம் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள வைத்தியர் பற்றாக்குறை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரப் பணியாளர்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக சுகாதாரப் பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

இதன் பின்னர், தற்போது விசேட வைத்தியர்கள் உட்பட பல வைத்தியர்கள் இலங்கைக்கு திரும்பி வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அத்துடன் பல வைத்தியர்கள் தமது விடுமுறைகளை இரத்து செய்துவிட்டு இலங்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
அது மாத்திரமன்றி, நாட்டை விட்டு வெளியேறும் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
வைத்தியர் பற்றாக்குறை
இலங்கைக்கு திரும்பியுள்ள வைத்தியர்கள் மூலம், சுகாதார அமைச்சினால் தேவையான வைத்தியசாலைகளுக்கு விசேட வைத்தியர்களை நியமிக்க முடிந்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும்" எனவும் அவர் நம்பிக்கை தெரிவிதுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri