கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் பணி பகிஸ்கரிப்பு: பொதுமக்கள் பாதிப்பு
கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று(19.01.2026) முதல் வைத்தியர்களால் பணி பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலைக்கு வருகை தந்த மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை பதவி நீக்கம் செய்து, பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்குமாறு கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பணி பகிஷ்கரிப்பு போராட்டம்
இந்நிலையில், இன்றைய தினம்(19) கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆரம்ப வைத்திய சேவை பிரிவு மற்றும் கிளினிக் சேவைகளில் வைத்தியர்கள் வருகை தராத காரணத்தினால் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் தமது கோரிக்கைக்கான சாதகமான தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினர் தெரிவித்துள்ளனர்.
இயங்கும் சேவைகள்
நாங்கள் பல மைல் தூரத்திலிருந்து அதிககூலி கொடுத்து ஆட்டோக்களில் இலவச சிகிச்சையை நாடி வருகிறோம். ஆனால் இங்கு வந்த பின்புதான் வேலைநிறுத்தம் என்று தெரிய வருகிறது.
ஏழை மக்களான நாங்கள் போக்குவரத்துச் செலவுகளைக்கூட சுமக்க முடியாமல் தவிக்கிறோம், என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்தியாவசிய சேவைகள் இயக்கம் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற போதிலும், மனிதாபிமான அடிப்படையில் பின்வரும் பிரிவுகள் வழமை போன்று இயங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- அவசர சிகிச்சைப் பிரிவுகள் (ETU)
- விடுதி நோயாளர் பராமரிப்பு
- அத்தியாவசிய சத்திர சிகிச்சைகள்
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இந்த பிரச்சினைக்கு சுகாதார அமைச்சு உடனடியாகத் தீர்வு கண்டு, பொதுமக்களின் சுகாதார உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலதிக தகவல் - கியாஸ்





சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam