அனுராதபுரம் வைத்தியசாலை சிறுவர் விடுதி மூடப்பட்டமை போன்ற நிலை யாழ்ப்பாணத்திலும் ஏற்படலாம்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிறுவர் விடுதி மூடப்பட்டமை போன்ற நிலை யாழ்ப்பாணத்திலும் ஏற்படலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண ஒருங்கிணைப்பாளர் தணிகாசலம் மயூரன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சிறுவர் விடுதி மூடப்பட்டுள்ளது
அண்மையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிறுவர் வைத்திய நிபுணர்கள் நான்கு பேர் நாட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில் வைத்தியசாலையின் சிறுவர் விடுதி மூடப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளது.
இதே நிலைமை யாழ்ப்பாணத்திலும் எதிர்வரும் காலங்களில் இடம்பெறலாம் என நாங்கள் அச்சப்படுகின்றோம்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பது மருத்துவ மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு உரிய ஒரு வைத்தியசாலை. நோயாளர்களின் பிரச்சினைக்கு மேலதிகமாக, இந்த அரசாங்கத்தின் செயல்பாடு காரணமாக மருத்துவ மாணவர்களின் கல்விக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
நாட்டை விட்டு வெளியேறும் புத்திஜீவிகள்
இது இலங்கை முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் மற்றும் அனைத்து தரப்பினர்களும் எமது நாட்டுக்கு அவசியமான கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறு நிலையில் ஏற்பட்டுள்ளது.
இந்த நாட்டை விட்டு வெளியேறுவது என்பது அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றது.
அந்த அடிப்படையில் தற்பொழுது எமது கண்ணுக்கு முன்னால் அனுராதபுரம் வைத்தியசாலையின் சிறுவர் விடுதி மூடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல மாதங்களாக நாங்கள் கூறி வருகின்றோம், எமது நாட்டில் இருந்து புத்திஜீவிகள் வெளியேறுகின்றனர்.
இது சம்பளப் பிரச்சினை மாத்திரமல்ல, எதிர்காலம் தொடர்பான அச்சத்தை தோற்றுவித்து வைத்துள்ளது.
இந்த நாட்டில் இருப்பதில் தொடர்கின்ற அச்சம். எமது அவதானிப்பில் பெரும்பாலான வைத்தியர்கள் இந்த நாட்டில் தங்கி இருந்து சேவை செய்வதை விரும்புகின்றனர்.
எனினும் குறிப்பிட்ட பகுதியினர் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.





சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

அமெரிக்காவில் வாளுடன் சுற்றித் திரிந்த சீக்கியர்: சுட்டுக் கொன்ற பொலிஸார்: வெளியான வீடியோ! News Lankasri

முத்துவை அசிங்கமாக பேசிய சீதா, கோபத்தில் பளார் என அறைந்த மீனா.. சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam
