5000 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து நுரையீரல் கட்டியை அகற்றிய சீன வைத்தியர்
சுமார் 5000 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து நுரையீரல் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சையை சீனாவைச் (China) சேர்ந்த வைத்தியர் ஒருவர் ரோபோ இயந்திரம் மூலம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
சீன வைத்தியசாலை ஒன்றின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான லூவோ கிங்குவேன் (Luo Qingquan) என்ற வைத்தியரே தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அலுவலகத்தில் இருந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஜூலை 13ஆம் திகதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5ஜி (5G) அறுவை சிகிச்சை ரோபோ இயந்திரத்தை பயன்படுத்தி ரிமோட் மூலம் சிகிச்சை செய்து நுரையீரல் கட்டியை வைத்தியர் அகற்றியுள்ளார்.
அறுவை சிகிச்சை
நோயாளி சீனாவில் உள்ள காஷ்கரில் சிகிச்சை பெற்ற நிலையில் வைத்தியர் ஷங்காயில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து சிகிச்சை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு சுமார் ஒரு மணி நேரம் செலவிடப்பட்டுள்ளது.
A surgeon in China successfully removed a lung tumor from a patient while being 5000 km away. The doctor operated the machine remotely from his office in Shanghai, while the patient was in Kashgar, located on the opposite side of the country. The entire operation was completed in… pic.twitter.com/8VQrpnvtS0
— Naresh Nambisan | നരേഷ് (@nareshbahrain) August 2, 2024
இந்நிலையில், டெலிமெடிசின் (Telemedicine) மற்றும் ரோபோடிக் (Robotic) அறுவை சிகிச்சையில் இது ஒரு முக்கிய படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குறித்த வைத்தியசாலையில் ரோபோ அறுவை சிகிச்சையை நடத்துவதோடு, ரோபோ தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |