யாழில் மலேரியா பரவக்கூடிய அபாயம்: சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன்

Jaffna Dengue Prevalence in Sri Lanka Hospitals in Sri Lanka National Health Service
By Erimalai May 02, 2023 04:45 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதாக யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மலேரியா பரவும் வாய்ப்புள்ள நாடுகளுக்கு சென்று வரக்கூடியவர்களுக்கான சுகாதார மற்றும் மலேரியா தடுப்பு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பாக இன்றைய தினம் (02.05.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் கூறியுள்ளதாவது,

யாழில் மலேரியா பரவக்கூடிய அபாயம்: சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் | Doctor A Ketheeswaran About Dengu In Jaffna

டெங்கு நோயாளிகள்

யாழ்ப்பாணத்தில் இவ்வருடத்தில் மட்டும் சுமார் 1132 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.டெங்கு நோயால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் படைத்துறையில் பணியாற்றியவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டெங்கு நோய் வருவதற்கு முன்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை, மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று வரக்கூடியவர்களுக்கான சுகாதார மற்றும் மலேரியா தடுப்பு ஆலோசனைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் மலேரியா பரவக்கூடிய அபாயம்: சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் | Doctor A Ketheeswaran About Dengu In Jaffna

மலேரியா நோய் பரம்பலைத் தடுத்தல்

இலங்கையில் மலேரியா நோயின் உள்ளுர் தொற்று இறுதியாக 2012 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் இதுவரை உள்ளுர் பரம்பல் காரணமாக எந்தவொரு நோயாளியும் இனங்காணப்படவில்லை. ஆனாலும் மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று இலங்கைக்கு திரும்பி வந்தவர்களில் பலருக்கு மலேரியா நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களில் 15 பேர் மலேரியா நோயுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்திலும் மேற்கு ஆபிரிக்க நாடொன்றுக்கு சென்று திரும்பிய உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி மலேரியா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தவருடம் ஏப்ரல் மாதத்தில் எமது நாட்டில் 14 வருடங்களுக்குப் பின்னர் மலேரியா நோயினால் ஒரு இறப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

யாழில் மலேரியா பரவக்கூடிய அபாயம்: சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் | Doctor A Ketheeswaran About Dengu In Jaffna

பேருவளை பிரதேசத்தில் இருந்து இரத்தினக்கல் வியாபார நோக்கத்திற்காக ஆபிரிக்கா சென்று திரும்பிய ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

மலேரியா பரம்பல் 

எமது நாட்டில் மலேரியா நோயைப் பரப்பும் நுளம்புகள் உலர்வலயப் பிரதேசங்களில் இன்னமும் காணப்படுகின்றன.இந்த நிலையில் மலேரியா பரம்பல் உள்ள நாடொன்றுக்கு சென்று அங்கு நோய் தொற்றுக்குள்ளாகி வருபவர்கள் மூலம் உள்ளுரில் மலேரியா பரம்பல் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெளிநாடொன்றில் மலேரியா தொற்றுக்குள்ளாகும் ஒருவருக்கு ஒரு வருட காலம் வரை எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லாது காணப்படலாம்.ஆனால் அவர் மூலம் ஏனையவர்களுக்கு இந்நோய் பரவும் வாய்ப்புள்ளது. எனவே மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் மலேரியா தடுப்பு மருந்தகளைப் பாவிக்க வேண்டும்.

யாழில் மலேரியா பரவக்கூடிய அபாயம்: சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் | Doctor A Ketheeswaran About Dengu In Jaffna

தற்போது பின்வரும் நாடுகளில் மலேரியா பரம்பல் அதிகமாக காணப்படகின்றது.தென்னாபிரிக்கா, உகண்டா, சூடான், ரூவண்டா, மொசாம்பிக், மடகஸ்கார், மத்திய ஆபிரிக்க குடியரசு, கானா, சைபீரியா, தன்சானியா, சிம்பாவே, பப்புவா நியூகினியா, சீரோலியான், சவுதி அரேபியா, தாய்லாந்து, இந்தியா மற்றும் சீனா. மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு செல்வதற்கு முன்னர் மலேரியா தடுப்பு மருந்தை பாவிக்க தொடங்குவதன் மூலம் மலேரியா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

தடுப்பு மருந்து

இத்தடுப்பு மருந்துகளைத் தங்களுக்கு அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் அல்லது யாழ்ப்பாணம் - பண்ணை சுகாதார கிராமத்திலுள்ள மலேரியா தடை இயக்க பணிமனையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

யாழில் மலேரியா பரவக்கூடிய அபாயம்: சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் | Doctor A Ketheeswaran About Dengu In Jaffna

மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று திரும்பிவந்த பின்னர் மலேரியா குருதிப் பரிசோதனையை கிரமமாக செய்வதன் மூலம் மலேரியா தொற்று உள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

எனவே எமது நாட்டில் மலேரியா நோயின் பரம்பலைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் வேண்டி நிற்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US