எதிர்வரும் நாட்களில் வயிற்றுப்போக்கு பரவும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
எதிர்வரும் வெசாக் பண்டிகைக்காக தானசாலைகளை ஏற்பாடு செய்யும் போது சுகாதார ஆலோசனைகளுக்கு அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வயிற்றுப்போக்கு பரவும் அபாயம் உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனவே திட்டமிட்டுள்ள தானசாலைகளின் விபரங்களை பகுதியின் சுகாதார அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு ஏற்பாட்டாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடுமையான சோதனை
வயிற்றுப்போக்கு பரவும் அபாயம் உள்ளதால், பானங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரின் தரம் குறித்து, அமைப்பாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

உணவுப் பொருட்களை ஈக்கள் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்க வேண்டும். கடந்த வெசாக் பண்டிகைகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மிகக் குறைவான தானசாலைகளே இயங்குகின்றன.
எனினும் அந்த இடங்களில் பயன்படுத்தப்படும் கொள்கலன்கள் மற்றும்
பாத்திரங்களும் தமது அதிகாரிகளின் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும் என
உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam