கோட்டாபயவுடன் பேச்சு! குழப்ப விரும்பவில்லை - ஏமாறவும் தயாரில்லை : சம்பந்தன் பதில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான பேச்சை நாம் குழப்பவும் விரும்பவில்லை. அதேவேளை, ஏமாறவும் தயாரில்லை. சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச்சில் பங்கேற்பதா என்பதை நாம் பரிசீலித்து முடிவெடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையைக் காட்டமாக விமர்சித்துள்ள நிலையில், ஜனாதிபதியுடனான பேச்சுக்களில் கூட்டமைப்பு சர்வதேச மத்தியஸ்தத்துடன்தான் பங்கேற்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த 18ஆம் திகதி ஆற்றிய கொள்கை விளக்க உரை நாட்டு மக்களை ஏமாற்றும் விதத்திலேயே அமைந்துள்ளது. பல்லாண்டு காலமாகத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு தொடர்பில் அவர் வாயே திறக்கவில்லை.
இந்நிலையில், அவர் தலைமையிலான அரசு எம்மைப் பேச்சு மேசைக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தால் அதில் நாம் பங்கேற்பதா அல்லது சர்வதேச மத்தியஸ்தத்துடன் பங்கேற்பதா என்று மிகவும் கவனமாகப் பரிசீலித்து முடிவெடுப்போம்.
ஏனெனில்,
இந்தக் கருமம் மிகவும் முக்கியமானது. நாம் எதனையும் குழப்பமும்
விரும்பமாட்டோம்; அதேவேளை ஏமாறவும் தயாராக இருக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri