பெற்றோர்களுக்கான முக்கிய அறிவித்தல்
ஏதேனும் நோய் அறிகுறி தென்பட்டால் அவ்வாறான பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்(Hemantha Herath) இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் முடிந்தளவு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளில் கோவிட் பரவுகையை கட்டுப்படுத்துவது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டமாக குழுமுவதனை அனைவரும் முடிந்தளவில் தவிர்க்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோவிட் பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
