கார்தினால் மீது சேறு பூசக்கூடாது : சரத் பொன்சேகா
கொழும்பு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது சேறு பூசக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka ) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலளார்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் சர்ச்சை நாடு முழுவதிலும் ஏற்பட்டது. அந்த சர்ச்சையின் உதவியில் இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது.
எனினும், இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தற்பொழுது சிறு கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டாலும் மக்கள் பீதியடைகின்றனர்.
இந்தப் பின்னணியை தற்போதைய அரசாங்கமே உருவாக்கியது. அரசாங்கத்தினால் மக்களுக்கு பாதுகாப்பினை வழங்க முடியாது என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. கார்தினால் உள்ளிட்ட அனைவரும் சிறிய விடயமொன்று தொடர்பிலும் பதற்றமடைகின்றனர்.
கார்தினாலின் குற்றச்சாட்டுக்களுக்கு சிலர் பதிலளிப்பதனை நாம் அவதானிக்கின்றோம்.
ஏட்டிக்கு போட்டியான பதில்களையே நாம் பார்க்கின்றோம்.
குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டு பிடிப்பதனை விடவும் கார்தினாலுக்கு சேறு பூசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 4 மணி நேரம் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan