இலங்கை கடற்பரப்பிற்குள் படகுகளுடன் நுழையாதீர்கள்! இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் சட்டதிட்டங்களை மீறி தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் ஈடுபடுகின்ற இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு தாங்கள் ஆதரவை வழங்குவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் அன்ரனி சங்கர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்திய கடற்றொழிலாளர்கள் மனித நேயத்துடன் செயல் பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மன்னாரில் இன்று (12) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கைது
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில் 47 இந்திய கடற்றொழிலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த கைதுக்கு எதிராக இந்தியாவில் பாரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.
இன்று மட்டுமல்ல இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து எமது கடற்றொழிலாளர்களின் பெறுமதியான மீன்பிடி வலைகளை நாசம் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.
ஒவ்வொரு நாட்டிற்கும் இறையாண்மை இருக்கிறது.குறித்த இறையான்மையை யார் மீறு கிறார்களோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
இலங்கை- இந்திய கடற்றொழிலாளர்களுக்கிடையில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றது.பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை இந்திய கடற்றொழில் சங்கங்கள் அல்லது மீனவ அமைப்புகள் கடைபிடிக்கவில்லை. அதற்கு எதிர்மாறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சட்ட நடவடிக்கை
இன்று வரை எமது இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்ற நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள்.ஆனால் இந்திய எல்லைக்குள் வைத்தே அவர்கள் இலங்கை கடற்படை கைது செய்வதாக குற்றம் சுமத்துகிறார்கள்.
தயவு செய்து அரக்கத்தனமாக படகுகளுடன் எங்கள் கடல் எல்லைக்குள் நுழையாதீர்கள்.நாங்களும் இந்த கடலை நம்பி இருக்கிறோம்.எங்களையும் வாழ விடுங்கள்.கோடிக்கணக்கான பெறுமதியான கடல் வழங்களையும்,மீன்பிடி உபகரணங்களையும் இழந்து கொண்டிருக்கிறோம்.
உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது தான் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறோம்.எமது வாழ்வாதாரத்தையும் முன்னோக்கி கொண்டு செல்கிறோம். கடற்றொழில் அமைச்சர் கூறியது போல் தயவு செய்து இலங்கை கடற்பரப்பில் வராதீர்கள்.
இலங்கை கடற்பரப்பில் நுழைந்தால் உங்களை கைது செய்வதில் எவ்வித மாற்றமும் இல்லை.அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்றொழில் அமைச்சருக்கும் , இலங்கை கடற் படைக்கும் நாங்கள் பூரண ஆதரவை வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகர்கள்... எந்த ஜோடி பாருங்க Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
