போரினால் உயிர்நீத்த எம் உறவுகளின் நினைவு தினத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஏற்கனவே போரினால் உயிர்நீத்த எம் உறவுகளின் நினைவு தினத்தை வருடா வருடம் தமிழர்கள் அனுஷ்டித்து வருவதில் தயவுசெய்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் சி.வரதநிரோஷன் (C.Varathaniroshan) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஆயர்களின் இந்த அழைப்பினை இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஏனென்றால் வெள்ளிக்கிழமை (19.11.2021) சர்வாலய தீபமும் சனிக்கிழமை (20.11.2021) விஷ்ணுவாலய தீபமுமாகும்.
இந்துக்களின் பண்டிகைகளுடன் உங்களது அரசியலை செய்ய வேண்டாம். 20ஆம் திகதி சனிக்கிழமை விஷ்ணு ஆலயங்களிலே தீபம் ஏற்றினால் பாதுகாப்பு படையினரால் அச்சுறுத்தல்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் அதிகம்.
ஆகவே இந்துப் பெருமக்களே, இந்து ஆலயங்களின் நிர்வாகிகளே சிந்தித்து செயற்படுங்கள்.
ஆயர்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்திலே திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு போன்ற இடங்களைச் சேர்ந்த ஆயர்களே கையொப்பமிட்டுள்ளனர்.
ஆனால் அவர்களின் தலைமைப் பீடமான கொழும்பிலுள்ள ஆயர் ஆல்பர்ட் மல்கம் ரஞ்சித் தற்போதைய இலங்கை ஜனாதிபதி, பிரதமர்களுடன் சந்தித்து தங்களுக்குத் தேவையானவற்றை பெற்று ஒற்றுமையாக இருப்பார்கள்.
ஆகவே, ஆயர்கள் இந்த அறிக்கையை மீளப்பெற வேண்டுமென எச்சரிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
