நாட்டை போதைப்பொருள் வர்த்தகர்கள் ஆட்சி செய்ய இடமளிக்க வேண்டாம் - பியூமி ஹன்சமாலி
இந்த நாட்டை போதைப்பொருள் வர்த்தகர்கள் ஆட்சி செய்ய இடமளிக்க வேண்டாம் என பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.
நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் அண்மையில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி பியூமி ஹன்சமாலி, அழகுக்கலை நிபுணரான சந்திமால் ஜயசிங்க உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் இந்த விருந்துபசாரத்தில் பங்கேற்ற மேலும் சிலர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அனைவருக்கும் பிணை வழங்கப்பட்ட நிலையில், பொலிஸார் இவர்களை தனிமைப்படுத்த தனிமைப்படுத்தல் நிலையமொன்றுக்கு அழைத்துச் சென்றனர்.
இதன் போது பஸ்ஸில் பயணித்தவாறே பியூமி சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நாட்டை போதைப்பொருள் வர்த்தகர்கள் ஆட்சி செய்வதாகவும் ஜனாதிபதி அதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் கோரியுள்ளார்.
தாங்கள் போதைப் பொருள் விற்பனை செய்தோ, பண மோசடி செய்தோ, பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டோ இவ்வாறு கைதாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் ஊடகமொன்றும் அதில் பணியாற்றும் ஊடகவியலாளர்களும் இந்தப் பிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த தனியார் தொலைக்காட்சியில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் மீறப்பட்ட போது அவை அம்பலப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது இந்த நாட்டில் வாழ்வதும் வெறுத்துப் போயுள்ளாகவும் இந்த நாட்டில் ஏன் வாழ்கின்றோம் என்ற உணர்வு உருவாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு வாக்களித்தவர்கள் என்ற வகையில் வேதனைப்படுவதாகவும், சட்டம் அனைவருக்கும் ஒரே விதமாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவரையும் பொலிஸார் பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும், இந்த விடயங்களை ஜனாதிபதி தயவு கூர்ந்து கவனத்திற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan