100 கோடி ரூபாய் இலஞ்ச வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது - தவெகவுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
தனியார் பாடசாலைகளுக்கு உரிமங்கள் மற்றும் பிற அரசு அனுமதிகளை வழங்குவதில் சுமார் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், தமிழகத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(26.10.2026) சென்னை பொலிஸார் மத்திய குற்றப்பிரிவு முன்னெடுத்துள்ளது.
ஊழல் மோசடி குற்றச்சாட்டில் கைது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த முறைகேட்டினால் 177 பாடசாலைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மூத்த தலைவரான அன்பில் மகேஷ், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் வாக்குமூலங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள், அவர் ஊழலிலும் நம்பிக்கையை மீறிய செயலிலும் ஈடுபட்டிருக்கலாம் என்பதைக் காட்டுவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்பிணை உத்தரவை நிராகரித்த நீதிமன்றம்
இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேற்படி குற்றச்சாட்டுக்களை அவர், மறுப்பதோடு, தனக்கு எதிரான இந்த வழக்கைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்கள் அரசியல் எதிரிகளை ஒடுக்க, புலனாய்வு அமைப்புகளை ஆளும் அரசு பயன்படுத்துவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தாக்கல் செய்திருந்த முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து. இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தவெகவை சாடும் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின்
நீதிபதி வி. லட்சுமிநாராயணன், முன்னாள் அமைச்சருக்குக் கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டார். இதற்கிடையில், தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்யக் கோரி, அவர் தனி மனு ஒன்றையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்! தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது. அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
— M.K.Stalin (@mkstalin) October 26, 2026
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,
"தன்னுடைய குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்த அன்பில் மகேஷைக் கைது செய்ததன் மூலம், சட்ட ஒழுங்கு சீர்குலைந்து கேலிக்குள்ளாகி இருப்பதையும், நிர்வாகத்தில் ஊழல் மலிந்து போயிருப்பதையும் தற்காலிகமாக மறைக்க ஆளும் அரசு முயல்கிறது. இதன் மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam