பிரெஞ்ச் ஓபன் டெனிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்
கிரேன்ஸ்லாம் கிண்ண நடப்பு சம்பியனான நோவக் ஜோகோவிச், இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் டெனிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் பிரான்சிஸ்கோ செருண்டோலோவுக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஐந்து செட்கள் வரை நீடித்த நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் வந்து பிரெஞ்ச் ஓபன் காலிறுதிச் சுற்றுக்கு அவர் தெரிவி செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான செர்பியாவின் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் 23ஆவது நிலை வீரரான செருண்டோலோவுக்கு எதிராக 6-1 5-7 3-6 7-5 6-3 என்ற கணக்கில் வெற்றி போட்டியை தன்வசப்படுத்தியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டி
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச்சின் 370வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியானது டெனிஸ் சாதனையாளர் என வர்ணிக்கப்படும் ரோஜர் பெடரரை பின்தள்ளியுள்ளது.
இதற்கு முந்தைய ஆட்டத்தின் 3ஆவது சுற்றில் செர்பியா நாட்டு வீரரான நோவக் ஜோகோவிச் இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை வென்றதன் மூலம் 4ஆவது சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
3ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சம்பியன் ஜோகோவிச் 7-5, 6-7 (6/8), 2-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இந்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
குறித்த போட்டியில் முதல் செட்டை தன்பக்கம் இருந்து ஆரம்பித்த ஜோகோவிச், 12ஆவது ஆட்ட நிறைவில் மீண்டும் பிரேக் செய்து முதல் செட்டை கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் 3-1 என முன்னிலையில் இருந்த அவர், ஏழாவது ஆட்ட நிறைவில் டை-பிரேக்கரில் ஒரு செட் புள்ளியை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து 3ஆவது செட்டை இரட்டை பிரேக் மூலம் கைப்பற்றினார்.
கிராண்ட்ஸ்லாம் பட்டம்
இதன் தொடர்ச்சியில் நான்காவது செட்டை தனது இரட்டை பிரேக்கள் மூலம் சமன் செய்தார்.
குறித்த தொடரில் 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 12 ஆட்டங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளார்.
ஜோகோவிச் 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு கிரேன்ஸ்லாம் பட்டத்தை கூட தன்வசப்படுத்தவில்லை.
மேலும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அவர் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
இரண்டாவது இடத்தில் ஸ்பெய்ன் நாட்டை சேர்ந்த ரஃபேல் நடால் காணப்படுகிறார்.
செர்பிய டென்னிஸ் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் நோவக் ஜோகோவிச் நான்கு அமெரிக்க ஓபன் பட்டங்களையும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |