மக்களுக்கு வழங்கிய பொருட்களை திரும்பப் பெற்ற பிரதேச செயலகம் - NPP அரசுக்கு மக்கள் அதிருப்தி
கோப்பாய் பிரதேச செயலகத்தால் பிரஜாசக்தி திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உபகரணங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இன்று(07.10.2026) கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
திரும்ப பெறப்பட்ட பொருட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்கு வழங்கிய உபகரணங்களை பிரதேச செயலகத்திலிருந்து பயனாளிகள் எடுத்துச் செல்ல முற்பட்ட பொழுது உரும்பிராய் மேற்கு பிரஜாசக்தி தலைவர், “ உபகரணங்களை பெற முடியாது ரஜீவன் எம்பி வந்த பின்னரே உங்களுக்கு வழங்க முடியும்” என பொருட்களை திரும்ப பெற்றுள்ளார்.

இவ்வாறு திரும்ப பெறப்பட்ட பொருட்கள், உரும்பிராய் மேற்கு பகுதியிலுள்ள சனசமூக நிலையம் ஒன்றில் பிரஜாசக்தி தலைவரால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய செயற்பாடுகள் மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.