மக்களின் போராட்டத்தினை அரசியல் ரீதியான போராட்டம் என திசை திருப்ப முயற்சி
தமது நியாயமான போராட்டத்தினை அரசியல்ரீதியான போராட்டம் என திசைதிருப்ப முனைவதாக மட்டக்களப்பு- மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபையின் மக்கள் குறைகேள் கூட்டம் நேற்று(17.12.2025) மாலை புன்னைச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போதே மக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
தமது கிராம சேவையாளர் பிரிவில் கிராமசேவையாளர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர் என பலர் இருந்தபோதிலும் தமது பாதிப்பு தொடர்பில் முறையான ஆவனப்படுத்தல் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர்.
நஷ்ட ஈடு
அத்தோடு, தாங்கள் பாதிக்கப்பட்ட போதிலும் அது தொடர்பில் பதிவுசெய்யச் சென்றால் ஆதாரங்கள் கேட்பதாகவும் மக்கள் இதன்போது தெரிவித்தனர்.

பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் கிராம மட்டத்தில் தலைவர்களை நியமனம் செய்யும் விடயத்தில் கிராம மக்களின் எந்த ஆலோசனையும் பெறப்படாமல் ஒருவரை நியமித்துள்ளதாகவும் அவர் தனக்கு விரும்பியவர்களை மட்டும் பாதிக்கப்பட்டதாக காட்டி அவர்களுக்கு மட்டும் அரச நஷ்ட ஈடுகளையும் நிவாரணங்களையும் வழங்கியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குற்றச்சாட்டுகள்
அத்துடன் தாங்கள் நடாத்திய போராட்டத்தின் பின்னணியில் அரசியல்கட்சி இருப்பதாக கூறி தமது போராட்டத்தின் உண்மைத் தன்மையினை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் இதன்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

பிரஜா சக்தி நியமனங்களில் பிழைகள் நடைபெற்றுள்ளதை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் முறைப்பாடுகளை பதிவுசெய்வோம். பிரஜா சக்தி என்ற நியமனத்தின் மூலம் அரச அதிகாரிகளை கட்டுப்படுத்தும் செயற்பாட்டினை நாங்களும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் தினேஸ்குமார் தெரிவித்தார்.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan