டிட்வா புயல் இலங்கையை விட்டு நீங்கியிருந்தாலும்..வெளியான காலநிலை அறிக்கை!

Climate Change Weather Cyclone Cyclone Ditwah
By Shadhu Shanker Nov 30, 2025 02:30 AM GMT
Report

டிட்வா புயல் முழுமையாக இலங்கையை விட்டு நீங்கியது என்று என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

நிலவும் வானிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது காற்று சற்று வேகமாக வீசும்.

வேகமாக உயர்ந்து வரும் களனி ஆற்றின் நீர்மட்டம்! விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு....

வேகமாக உயர்ந்து வரும் களனி ஆற்றின் நீர்மட்டம்! விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு....

 டிட்வா புயல்

புயல் எம்மை விட்டு முழுமையாக நீங்கியிருந்தாலும் ஏற்கனவே கிடைத்த மழை காரணமாக இன்னும் மூன்று நாட்களுக்கு ஆறுகளுக்கும் குளங்களுக்கும் நீர் வரத்து இருக்கும்.

குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியாவுக்கு நீர் வரத்து நாளை முதல் குறைவடையும். ஆனால் மன்னாருக்கான நீர்வரத்து எதிர்வரும் 03.12.2025 வரை இருக்கும். ஆகவே குளங்களின் வான் பாயும் பகுதிகளை அண்மித்த மற்றும் ஆற்றங்கரையோரங்களில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம்.

டிட்வா புயல் இலங்கையை விட்டு நீங்கியிருந்தாலும்..வெளியான காலநிலை அறிக்கை! | Ditwah Storm Cyclone Leaves Sri Lanka

வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு பகுதி கடல்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆனாலும் இந்த புயலோடு தொடர்புடைய வானிலை சார்ந்து இனி அச்சப்பட எதுவுமில்லை.

கடந்த சில நாட்களாக கோரத்தாண்டவமாடி, இலங்கையின் காலநிலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்திய டிட்வா புயல் தற்போது இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறி தற்போது தமிழ்நாட்டின் காரைக்காலுக்கு மேற்கே நிலைகொண்டுள்ளது.

இன்னும் ஒரு நாள் டிட்வா இலங்கையில் நிலைத்திருந்தால் மாபெரும் பேரழிவுகள் இலங்கையில் நிகழ்ந்திருக்கும். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகப்பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கும்.

இலங்கையின் அசாதாரண நிலை! அவசரமாக விரைந்த இந்திய விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள்..

இலங்கையின் அசாதாரண நிலை! அவசரமாக விரைந்த இந்திய விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள்..

 புயலின் நகர்வு வேகம்

இந்த டிட்வா புயலின் நகர்வில் பல தடவைகள் அதிக அச்சம் இருந்தது. ஏனெனில் அதன் நகர்வு அத்தகையது. கடந்த 24.11.2025 அன்று தீவிர தாழமுக்கமாக அதன் நகர்வு வேகம் மணிக்கு 9 கி.மீ. ஆக இருந்தது.

டிட்வா புயல் இலங்கையை விட்டு நீங்கியிருந்தாலும்..வெளியான காலநிலை அறிக்கை! | Ditwah Storm Cyclone Leaves Sri Lanka

பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின் மணிக்கு 11 கி.மீ. ஆக இருந்தது. பின்னர் புயலாக மாறியபோது சிறிது நேரம் மணிக்கு 14 ஆக இருந்தது. பின்னர் மத்திய மலை நாட்டின் செல்வாக்கு காரணமாக மணிக்கு 9 கி.மீ. ஆக குறைந்தது. பின்னர் மணிக்கு 4 ஆகக் குறைந்தது.

உண்மையில் இந்த நேரத்தில் மிகப்பெரும் அச்சநிலை இருந்தது. ஏனெனில் ஒரு புயலின் நகர்வு வேகம் குறைந்தால் அது நிலைத்து நின்று பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ஆனால் அது மத்திய மலை நாட்டின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு பொலன்னறுவைக்கு வந்த பின் மீண்டும் வேகமெடுத்து மணிக்கு 14 கி.மீ. நகர்ந்தது.

பின்னர் மீண்டும் திருகோணமலைக்கு வந்த மீளவும் வேகம் குறைவடைந்து மணிக்கு 8 கி.மீ. ஆகக் குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு அச்சநிலை ஏனெனில் ஏற்கனவே வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு கனமழை கிடைத்துக் கொண்டிருந்தது.

ஆனால் மீளவும் வேகமெடுத்து மணிக்கு 12 கி.மீ என்ற வேகத்தில் கடலுக்குள் சென்றது. இந்த டிட்வா புயலின் இரண்டு விடயங்களுக்கு இலங்கையின் மத்திய மலைநாடு காரணமாயிருந்தது. 1. புயலின் நகர்வு வேகத்தையும் மையச் சுழற்சியின் வேகத்தையும் கட்டுப்படுத்தியது.

2. மிகக் கனமழை பொழியவும் காரணமாக இருந்தது.

எவ்வாறாயினும் இந்த டிட்வா புயல் இன்னும் ஒரு நாள் இலங்கையில் நிலைத்திருந்தாலும் இலங்கையின் நிலைமை மிக மிக கவலைக்கிடமாக இருந்திருக்கும்.

இலங்கையின் நவீன வரலாற்றில் நிகழ்ந்த ஆகப்பெரிய காலநிலை சார் இயற்கை அனர்த்தம் இதுவே. இது இலங்கையில் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்திய இரண்டாவது இயற்கை அனர்த்தமாக மாறியுள்ளது.

கால்நடைகளின் நிலை

முதலாவது 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி. ஆனால் பொருளாதாரப் பாதிப்பினை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தங்களில் இதுவே முதலாவது. ஏனெனில் சுனாமியினுடைய பொருளாதாரப் பாதிப்புக்கள் கரையோரம் சார்ந்து மட்டுமே இருந்தது. ஆனால் டிட்வா புயல் நாடு முழுவதும் பாதித்துள்ளது. இன்னும் சில நாட்களில் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வரும்போது அதனை உணரலாம்.

உயிரிழப்புக்கள் கூட நாம் நினைப்பதை விட மிக அதிகமாக இருக்கவே வாயப்புண்டு. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதனால் 13 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

டிட்வா புயல் இலங்கையை விட்டு நீங்கியிருந்தாலும்..வெளியான காலநிலை அறிக்கை! | Ditwah Storm Cyclone Leaves Sri Lanka

ஆனால் பில்லியன் கணக்கான பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான வயல் நிலங்கள், தோட்ங்கள் அழிந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளன.

இலட்சக்கணக்கான கால்நடைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 200க்கு மேற்பட்ட குளங்கள் முழுமையாக புனரமைக்க வேண்டும். வீதிகள், பாலங்கள், புகையிரதப்பாதைகள், பொது நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன.

அனர்த்தத்துக்கு பின்னான நிலைமையிலும் நாம் மிக அவதானமாகவும் பொறுப்போடும் நடந்து கொள்ளவேண்டும். திட்டமிட்ட வினைத்திறனான அனர்த்த மீட்பு செயற்பாடுகள் அவசியம். குறுங்கால அனர்த்த மீட்பு செயற்பாடுகளும் நீண்ட கால அனர்த்த மீட்பு செயற்பாடுகளும் ஒன்றுடனொன்று இணைந்த வகையில் அமைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US