சமூக பிணக்குகளை வலுப்படுத்தல் தொடர்பில் மாவட்ட மட்ட செயலமர்வு
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமையில் சேர்ச் போர் கொமன்ட் (SFCG) ஆல் நாடளாவிய ரீதியில் SEDR திட்டமானது செயற்படுத்தப்படுகின்றது.
SFCG திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கானது, இலங்கையில் இலக்கு வைக்கப்பட்ட ஆறு மாவட்டங்கள் மற்றும் பன்னிரண்டு பிரிவுகளில் மோதலை அமைதியான முறையில் நிர்வகிக்கவும் மற்றும் வன்முறை அதிகரிப்பதைத் தடுக்கவும் உள்ளூர் தகராறு தீர்வு வழிமுறைகளை (ADR மன்றங்கள்) ஊடாக வலுப்படுத்துவதாகும்.
பகிரப்பட்ட அறிவு
இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் SFCG ன் திட்டத்தை விழுது ஆற்றல் மேம்பாடு மையம் நடைமுறைப்படுத்தி வருகிறது இதன் அடிப்படையில் ஜூலை மாதம் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் மூதூர் , தம்பலகாமம் பிரதேச குழுவினர்களை ஒன்றினைத்து மாவட்ட மட்ட செயலமர்வு மூதூர் பேல் கிரான்ட் அறையில் இடம்பெற்றது.

இப் பயிற்சியின் மூலம் பிரதேசத்தில் ADR மன்றங்களுக்கு தேவையான பயிற்சியை சிரேஷ்ட சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் வழங்கினார். ADR வழிமுறைகள், எளிதாக்குதல், மத்தியஸ்தம், பேச்சுவார்த்தை, மற்றும் நடுவர் ஆகியவற்றில் பகிரப்பட்ட அறிவு மற்றும் திறன்களுக்கான இடத்தை உருவாக்குவதை இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்ட நடைமுறைகளை மேற்பார்வை செய்வதற்க்காகவும் இதன் முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்க SEDR திட்டத்தின் குழுத் தலைவர் ஜாக் கார்ஸ்டென்ஸ். மற்றும் திட்ட முகாமையாளர் அல்டென் பெர்க் மற்றும் திட்ட மேற்பார்வையாளர் உதரா ஜெயசேனா மற்றும் கிழக்கு மாகாண ஒருங்கினைப்பாளர் போனி வின்சென்ட் போன்றவர்கள் SEDR திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த உரையாடல், பிரதிபலிப்பு மற்றும் அவதானிப்புகளில் ஈடுபடுவதற்காக அவர்கள் திருகோணமலையை மூதூர் பகுதிக்கு வருகை தந்தனர்.

இதன் போது எம்.எஸ்.எம். நசீர், SFCG திட்ட மேலாளர் மற்றும் உவைசுல் கர்னி, SFCG மாகாண ஒருங்கிணைப்பாளர் மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தின் கள ஒருங்கினைப்பாளர் டி.எம். ஹிஷாம் மற்றும் இதயா போன்றவர்களும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam