'மாவட்ட அரச பயங்கரவாதம்' என்ற குற்றச்சாட்டிற்கு மட்டக்களப்பு நிர்வாகசேவை சங்கம் கண்டனம்
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசீர் நசீர் அகமட் மாவட்ட அரச பயங்கரவாதம் என ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அந்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு நிர்வாகசேவை சங்க தலைவரும் மேலதிக அரசாங்க அதிபருமான சுதர்ஷினி சிறிகாந் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நிர்வாகசேவை சங்கத்தினரால் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ஆண்டு (29.12.2021) அன்று ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசீர் நசீர் அகமட் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக சேவைகள் உத்தியோத்தர்களின் பெயர்களை பகிரங்கமாக கூறி அவர்களது இடமாற்றம் தொடர்பாக விவாதித்துள்ளார்.
குறிப்பாக இந்த இடமாற்ற விடயங்களானது பொதுச் சேவை ஆணைக்குழுவின் விடயமாக பிரதேச நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பொறுப்பான பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டத்தில் இருக்கின்ற நிர்வாகசேவையினரது இடமாற்றம் பற்றி மக்கள் பிரதிநிதி விவாதித்ததோடு குறித்த உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட பெயர்களை நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியிலே காட்டி ஆதாரமற்ற முறையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்வாக பயங்கரவாதம் இடம்பெறுகின்றது என்பதை வன்மையாக கண்டிப்பதோடு மாவட்டத்தில் மாவட்ட நிர்வாக கட்டமைப்பில் பல்வேறு உத்தியோகத்தர்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான வார்த்தை பிரயோகம் அவர்களின் மனங்களை வேதனைப்படுத்தியுள்ளது.
அதேவேளை மாவட்ட அபிவிருத்தியில் அக்கறையோடு செயற்படுகின்ற உத்தியோகத்தர்களை மிகவும் மனக்கவலையடைந்துள்ளனர் எனவே எதிர்காலத்தில் பொது விவாதத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறக்கூடாது என்பதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசீர் நசீர் அகமட் இந்த மாவட்ட அரச பயங்கரவாதம் என்றதை வன்மையாக கண்டிப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஊடக சந்திப்பில் நிர்வாகசேவை சங்க மட்டக்களப்பு கிளை செயலாளரும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி. வாசுதேவன் மற்றும் பிரதேச செயலாளர்கள், நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
