மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட மெய்வல்லுனர் போட்டி
திருகோணமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் போட்டியானது திருகோணமலை இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (07.05.2026) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த மெய்வல்லுனர் போட்டியை சமூக சேவைகள் திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இதில் சக்கர நாற்காலி ஓட்டப் போட்டி, பரிதி வட்டம் எரிதல், ஈட்டி எரிதல், நீளம் பாய்தல், உயரம் பாய்தல் உள்ளிட்ட பல போட்டிகள் வயது அடிப்படையில் இடம் பெற்றன.
இதில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள் பரிசில்களும் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் சமூக சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







