இலங்கையில் சில பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை
தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தெனியாய பகுதிகளில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இவ்வாறு குறித்த பாடசாலைகளில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கு
பாடசாலை மாணவர்களிடையே நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தெனியாய தேசியப் பாடசாலை, தெனியாய புனித மத்தேயு இருமொழிப் பாடசாலை, தெனியாய ராஜபக்ச வித்தியாலயம் மற்றும் பல்லேகமவில் உள்ள சித்தார்த்த தொடக்கப் பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களுக்கு இன்று (07) மற்றும் நாளை (08) என இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மாகாண ஆளுநர் அலுவலகத்தின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.