மன்னார் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மணல் விநியோகம்

Mannar Northern Province of Sri Lanka
By Ashik May 23, 2026 05:52 AM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மணல் விநியோகத்தில் ஒரு சீரற்ற நிலை காணப்பட்ட நிலையில் தற்போது மாவட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு மணல் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான மணல் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று(22.05.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலுக்கு என்ன நடந்தது..! சரத் பொன்சேகா பகிரங்கப்படுத்திய பரபரப்பான உண்மைகள்

விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலுக்கு என்ன நடந்தது..! சரத் பொன்சேகா பகிரங்கப்படுத்திய பரபரப்பான உண்மைகள்

மணலை அதிகமான விலைக்கு விற்கின்ற நிலை

மேலும் தெரிவிக்கையில், கடந்த இரண்டு மாதங்களாக மன்னார் மாவட்டத்தில் மணல் விநியோகத்தில் ஒரு சீரற்ற நிலைமை காணப்பட்டது.

மணலை அதிகமான விலைக்கு விற்கின்ற நிலைமையும், அதேபோன்று சட்டவிரோதமான முறையில் மணல் அகழப்படும் நிலைமைகளும் காணப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மணல் விநியோகம் | Distribution Of Sand At Fixed Prices In Mannar

எனவே, மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் முகமாக, நமது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பில் பல்வேறுபட்ட கூட்டங்கள் நடைபெற்றன.

அதன் அடிப்படையில், தற்போது மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு சீரான நடைமுறை மன்னார் மாவட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

எதிர் காலத்தில் மணல் விநியோகத்தை மேற்கொள்ளும் பொழுது, குறிப்பிட்ட மணல் அகழ்வு இடங்கள் அடையாளம் காணப்பட்டு, மணல் விநியோகத்துடன் தொடர்புடைய புவிச்சரிதவியல் அளவீட்டுப் பணியகம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கூட்டுப் பரிசோதனையின் பின்னர் பொருத்தமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, அதன் பின்னர் மாவட்ட செயலாளரினால் குறிப்பிட்ட இடங்களில் மணல் விநியோகிப்பதற்காக மணல் அகழ்வு செய்வதற்கான சிபாரிசு புவிச்சரிதவியல் திணைக்களத்துக்கு வழங்கப்படும்.

அதன் பின்னர் புவிச்சரிதவியல் திணைக்களத்தினால் எதிர்காலத்திலே மணல் விநியோக த்திற்குரிய அனுமதி வழங்கப்படவிருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களாக

நாங்கள் தற்போது மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மணல் அதிக விலையில், 85,000 ரூபாய்க்கு மேற்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு நிலைமை காணப்பட்டது.

அதனைத் தவிர்க்கும் முகமாக, நாங்கள் தற்பொழுது மணல் விநியோகத்தினை சீர்ப்படுத்துவதற்காக மணல் விலையையும் நாங்கள் மன்னார் மாவட்டத்தில் நிர்ணயித்திருக்கின்றோம்.

மன்னார் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மணல் விநியோகம் | Distribution Of Sand At Fixed Prices In Mannar

அதன் பிரகாரம் மாந்தை மேற்கு, முசலி, நானாட்டான், மடு பிரதேச செயலாளர் பிரிவுகளில் மணல் யார்ட் (மணல் ஸ்டோர்) உள்ள இடங்களில் மணலைப் பெற்றுக் கொள்ளும் போது, அதற்குரிய விலையாக 3 கியூப் (3 Cube) உள்ள டிப்பர் வாகனத்திற்கு 39,250 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அந்த மணல் யார்ட் உள்ள இடங்களில் மணலைப் பெற்றுக் கொள்ளும் பொழுது 39,250 ரூபாய்க்கு 3 கியூப் அளவான மணலினை பெற்றுக்கொள்ள முடியும்.அதேவேளை, மன்னார் நகர பிரதேச - மன்னார் நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலே 3 கியூப் அளவான மணல் 51,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பு - இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி

அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பு - இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி

மாவட்டத்தின் மணல் நெருக்கடி

மன்னார் நகர பிரதேசத்தைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலே (தலைமன்னார், பேசாலை போன்ற பகுதிகளில்) மணல் விநியோகம், மன்னார் நகரத்திற்கு அப்பால் கிலோமீட்டருக்கு 350 ரூபாய் என்ற மேலதிகமாகச் செலுத்தி மணல் தேவைப்படுவோர் மணலினை பெற்றுக் கொள்வதற்குரிய சந்தர்ப்பமும் தற்பொழுது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மணல் விநியோகம் | Distribution Of Sand At Fixed Prices In Mannar

நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு மணல் வழங்க உடன்பட்ட மணல் அனுமதிப் பத்திரதாரர்களுக்கே இப்பொழுது மணல் அனுமதிப்பத்திரம் மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே மணல் தேவைப்படும் வீட்டுரிமையாளர்கள், அதேபோன்று ஒப்பந்தக்காரர்கள் (Contractors) தங்களது பிரதேச செயலகங்களில் அல்லது நகர சபை, பிரதேச சபைகளுடன் விண்ணப்பிக்கும் இடத்து நாங்கள் மிக விரைவில் மணல் விநியோகத்தைச் செய்யவிருக்கிறோம்.

மன்னார் மாவட்டத்தின் மணல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, தற்பொழுது 22 மணல் அனுமதிப் பத்திரதாரர்களால் விநியோகிக்கப்படும் மணலானது குறிப்பிட்ட காலம் வரை மன்னார் மா வட்டத்திற்குள்ளேயே விநியோகிக்கப்பட இருக்கிறது.

மன்னார் மாவட்டத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் மற்றும் ஏனைய மாவட்டங்களுக்குமான மணல் விநியோகம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனறும் குறிப்பிட்டு்ள்ளார். 

வெளிநாடொன்றில் பொலிஸ் காவலில் இருந்த இலங்கை இளைஞன் மர்ம மரணம்

வெளிநாடொன்றில் பொலிஸ் காவலில் இருந்த இலங்கை இளைஞன் மர்ம மரணம்

வாகன இலக்கத் தகடுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

வாகன இலக்கத் தகடுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US