தம்பலகாமம் பகுதியில் மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை: இருவர் தப்பியோட்டம்
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு அண்மித்த காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபானம் உற்பத்தி நிலையம் ஒன்றை கந்தளாய் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்று(02.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
5 லட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு
இதன்போது, மதுபானம் உற்பத்திக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று பீப்பாய்களில் இருந்த சுமார் 540,000 மில்லி லீற்றர் கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

மேலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, பரவிபாஞ்சான் குளத்தின் நீரில் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 47 மரக் குற்றிகள் மற்றும் மரக்கம்புகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவ இடத்தில் இருந்த சந்தேகநபர்கள் பொலிஸாரைக் கண்டதும் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பிச்சென்ற இரு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 5 இலட்சம் ரூபாய் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam