கட்டுநாயக்க விமான நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து கடும் அதிருப்தி
கட்டுநாயக்க விமான நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் மிகவும் தளர்வான சுகாதார வழிகாட்டல்களே பின்பற்றப்பட்டு வருவதாகவும், பரிசோதனைகளை தவிர்த்து பயணிகள் வெளியேறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஆபிரிக்க நாடுகளில் பதிவான ஒமிகோர்ன் திரிபு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாட்டை தாக்கக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் தொற்று உறுதியாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போக்கினை அவதானிக்க முடிகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டாலும் அவை மிகவும் மெத்தனப்போக்கில் பின்பற்றப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
இதனால் புதிய திரிபில் தாக்கப்பட்ட பயணிகள் எவரும் நாட்டுக்குள் பிரவேசிக்க கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் உயிர்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கோவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் ஒமிகோர்ன் திரிபினை அடையாளம் காண முடியும் என உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri