யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் (PHOTOS)
யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகத்தின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது இராணுவத்தினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்கியுள்ளதுடன், இதனை தொடர்ந்து நள்ளிரவை அண்மித்தும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதனை அடுத்து இன்றைய தினம் அதிகாலை முதல் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்று சென்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு அதிகமாக மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பெறுவதற்கு நீண்ட வரிசையில் பலர் காத்திருக்கின்றனர்.


இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 18 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri