சிதறி போயுள்ள மொட்டுக்கட்சி-அனுரகுமாரவிடம் தகவலை கூறிய முக்கியஸ்தர்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தவர் ஒருவருக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்று நடந்துள்ளது.
மொட்டுக்கட்சியின் றெருக்கடி குறித்து விசாரித்த அனுரகுமார
இந்த பேச்சுவார்த்தையின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய நெருக்கடி குறித்து அனுரகுமார திஸாநாயக்க, விசாரித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர், கட்சிக்குள் பிளவு அல்ல கட்சி சிதறி போயுள்ளது என கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே சில அணிகளாக பிரிந்து சென்றுள்ளது. பொதுஜன பெரமுனவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார பிரிந்து சென்றுள்ளனர்.
ராஜபக்ச ஆதரவாளர்களும் பிரிந்து சென்றுள்ளனர்
பொதுஜன பெரமுனவின் முக்கிஸ்தரும் ராஜபக்ச ஆதரவு அணியாக இருந்த டலஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ் போன்றோரும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றுள்ளனர்.
மேலும் அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி, ஜோன் செனவிரட்ன தனி அணியாக பிரிந்துள்ளனர்.
இதனிடையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பசில் ராஜபக்ச அணி, நாமல் ராஜபக்ச, நிமல் லங்ச அணி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அணி என மேலும் பிளவுப்பட்டுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



